News August 29, 2025
IND – JPN இணைந்தால் புதிய தொழில்புரட்சி: PM நம்பிக்கை

ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்து புதிய தொழில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என PM மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள மோடி, மெட்ரோ முதல் செமி கண்டக்டர் வரை இந்தியாவும், ஜப்பானும் நெருங்கிய ஒத்துழைப்பை கொண்டுள்ளதாகவும், ஜப்பானின் ஒத்துழைப்புடன் மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
Similar News
News August 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 30, 2025
தோனி என்னை அசிங்கமாக திட்டினார் : மோகித்

கேப்டன் கூல் எனப்படும் தோனி பொறுமையை இழந்தால் கடுமையாக திட்டுபவர் என்று மோகித் சர்மா தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக தோனி ஈஷ்வர் பாண்டேவை பந்து வீச அழைத்த நிலையில், நான் சென்றேன். நான் ரன் அப் எடுத்ததால், தோனி தடுத்தும் நடுவர் என்னை பந்துவீச சொல்ல அவர் அசிங்கமாக திட்டினார். முதல் பந்திலேயே யூசப் பதானின் விக்கெட் எடுத்தேன். அப்போதும் தோனி தன்னை திட்டியதாக மோகித் சர்மா கூறினார்.
News August 30, 2025
இந்தியா – சீனா நட்புறவு உலகத்திற்கு அவசியம்: PM

உலகத்தின் பொருளாதார நிலைத்தன்மைக்காக இந்தியாவும், சீனாவும் இணைந்து வேலை செய்ய வேண்டியது அவசியம் என PM மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள PM அங்குள்ள மீடியாவிற்கு அளித்த நேர்காணலில், சீனா உடனான உறவை முன்னோக்கி கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும், இருநாடுகளின் நட்புறவு உலக நன்மைக்கு அவசியம் என்றும் கூறியுள்ளார். ஜப்பானில் இருந்து PM மோடி, நாளை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.