News August 29, 2025
கடலூர் மக்களே சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்!

கடலூர் மக்களே, முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
Similar News
News August 30, 2025
விவசாய பொருட்கள் கண்காட்சி; பார்வையிட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த விவசாய பொருட்கள் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நேற்று(ஆக.29) பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி காந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கதிரேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News August 30, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (ஆக.29) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 29, 2025
வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் தனியார் பள்ளியில் நடைபெற இருந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சில நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி. ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அவசர நிர்வாக காரணங்களின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.