News August 29, 2025

திமுக அரசை கடுமையாக சாடிய அண்ணாமலை

image

திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தனது X பதிவில் 2023 – 2024 கல்வியாண்டில் 42.23% ஆக இருந்த சேர்க்கை விகிதம் நடப்பு கல்வியாண்டில், 37.92% ஆக குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளை விட தனியாரில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளதாகவும், இந்த அரசு வெற்று விளம்பர அரசு என்றும் சாடியுள்ளார்.

Similar News

News August 30, 2025

‘மதராஸி’ படத்திற்காக SK வாங்கிய சம்பளம்

image

பொதுவாக ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ₹40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், ‘மதராஸி’ படத்தில் நடிக்க வழக்கத்தை விட குறைவான சம்பளத்தையே வாங்கியுள்ளாராம். இப்படம் வெளியாகி வெற்றபெற்ற பின், அந்த லாபத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை மீதி சம்பளமாக பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளாராம். அதாவது Profit sharing முறையில் அவர் நடித்து கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News August 30, 2025

ராசி பலன்கள் (30.08.2025)

image

➤ மேஷம் – பொறுமை ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – ஆதாயம் ➤ கடகம் – நலம் ➤ சிம்மம் – பக்தி ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – போட்டி ➤ விருச்சிகம் – வாழ்வு ➤ தனுசு – மகிழ்ச்சி ➤ மகரம் – வெற்றி ➤ கும்பம் – பயம் ➤ மீனம் – ஏமாற்றம்.

News August 30, 2025

RECORD: 4 பந்துகளில் 4 விக்கெட்

image

துலீப் டிராபி தொடரில் North Zone அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி சாதனை படைத்துள்ளார். East Zone-க்கு எதிரான ஆட்டத்தில், 53-வது ஓவரை வீசிய நபி, கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து அவர் வீசிய ஓவரின் முதல் பந்திலேயே ஒரு விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம், துலீப் டிராபியில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இது அவரது அறிமுக போட்டியாகும்.

error: Content is protected !!