News August 29, 2025

மயிலாடுதுறை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணு

Similar News

News August 30, 2025

கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டு கண்காட்சி

image

சீர்காழி வட்டம் மேலையூரில் உள்ள பூம்புகார் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், பூம்புகார் கல்லூரி முதல்வர் சிவசக்திவேல், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

News August 29, 2025

மயிலாடுதுறையை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்!

image

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நதியின் வளமான டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து பழையார் வரை வங்காள விரிகுடாவின் கடற்கரையோரமாக சுமார் 70.9 கிலோமீட்டர் (44.1 மைல்) கடற்கரை நீளத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,169.30 சதுர கிலோமீட்டர்கள் (451.47 சதுர மைல்) ஆகும். இது மாநிலத்தின் பரப்பளவில் 0.90% ஆகும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 29, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!