News April 9, 2024

ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி

image

முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் (98) உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக நீண்ட நாள்களாக வீட்டில் இருந்த அவருக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News

News August 12, 2025

ரொனால்டோவுக்கு டும் டும் டும்..

image

தனது 8 ஆண்டு காதலியான ஜார்ஜினாவை நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விரைவில் திருமணம் செய்ய உள்ளார். நிச்சயதார்த்த மோதிரத்துடன் ஜார்ஜினா போட்டோ ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளனர். விளையாட்டு வீரர்களில் அதிக வருமானம் ஈட்டும் ரொனால்டோ விரைவில் பிரமாண்டமாக திருமணத்தை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

News August 12, 2025

நேரில் பார்க்காத ஸ்டாலின், EPS! இரங்கல் தெரிவிக்காத விஜய்!

image

2026-ல் CM வேட்பாளர்களாக களமிறங்கும் ஸ்டாலின், EPS, விஜய் ஆகியோர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காதது சர்ச்சையாக வெடித்துள்ளது. தூத்துக்குடிக்கு சென்ற ஸ்டாலின், EPS இருவரும் கவின் குடும்பத்தை நேரில் சந்திக்கவில்லை. அதேபோல், விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் விஜய், EPS பெயரை குறிப்பிட்டு சாடிய திருமா, ஸ்டாலின் பெயரை தவிர்த்தது பேசுபொருளாகியுள்ளது.

News August 12, 2025

கஞ்சாவை மத்திய அரசே தடுக்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி

image

தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்சுவதில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், வெளி மாநிலங்​களில் இருந்து வரும் அவற்றை மத்​திய அரசு​தான் தடுக்க வேண்​டும் எனவும் தெரிவித்துள்ளார். மத்​திய அரசை சா​டி​னால் வரு​மானவரித் துறை, அமலாக்​கத் துறை சோதனை வந்​து​விடுமோ என்ற பயத்​தில் தமிழக அரசு மீது ராம​தாஸ் குறை​கூறி வரு​வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!