News August 29, 2025

சற்றுமுன்: அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

image

மாணவர்களிடம் எதிர்மறையாக பேசக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. கற்றலில் பின்தங்கி இருக்கும் மாணவர்களையும், வகுப்பில் சேட்டை செய்யும் மாணவர்களையும் அனைவரது முன்னிலையிலும் திட்டக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றலில் முன்னேற்றம் இல்லாதது குறித்து காரணம் கூறுவதை தவிர்த்து, அவர்களை கற்றலில் முன்னேற்ற முனைப்பு காட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 29, 2025

வசமாக சிக்கிய நடிகை லட்சுமி மேனன்?

image

கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனனின் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் செப்.17 வரை லட்சுமி மேனன் முன்ஜாமின் பெற்றுள்ளார். இந்நிலையில், கைதாகியுள்ள 3 பேரில் மிதுன் மோகன் என்பவர் கூலிப்படையை சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய அவருக்கு, லட்சுமி மேனனுடன் எப்படி தொடர்பு என போலீஸ் விசாரித்து வருகிறது.

News August 29, 2025

Parenting: குழந்தைக்குள் நல்ல குணத்தை வளர்ப்பது எப்படி?

image

குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது. இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு எளிதில் ஒழுக்கத்தையும், நல்ல பழக்கத்தையும் கற்றுக்கொடுக்கலாம் ▶அனைத்தையும் சொன்ன உடன் செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்காதீர்கள் ▶ஒழுக்கமாக இருப்பதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரையுங்கள் ▶நீங்கள் முதலில் அதனை கடைபிடியுங்கள் ▶Moral Values படங்களை போட்டு காட்டுங்கள். SHARE.

News August 29, 2025

காத்திருப்பு வீரர்களை விட்டு செல்லும் BCCI

image

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் காத்திருப்பு வீரர்களை துபாய்க்கு அழைத்து செல்வதில்லை என BCCI முடிவு செய்துள்ளது. தேவை எழுந்தால் மட்டுமே இவர்கள் துபாய்க்கு அழைக்கப்படுவார்கள். ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜுரெல் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக உள்ளனர். இத்தகைய வீரர்கள் பிரதான அணியுடன் பயணம் செய்வது வழக்கமாக இருந்த நிலையில், அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!