News April 9, 2024

குமரி: போதை கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி

image

குமரி, தக்கலை அருகே உள்ள வண்டாவிளையை சேர்ந்தவர் ஹரிதாஸ்(58), கொத்தனார். இவரது மனைவி லதா(48). ஹரிதாஸ் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும்(ஏப்.8) ஹரிதாஸ் பிரச்னை செய்யவே, ஆத்திரமடைந்த லதா வெந்நீரை அவர் மீது ஊற்றியுள்ளார். இதில் காயமடைந்த ஹரிதாஸ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தக்கலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 14, 2026

குமரி: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் சோக முடிவு

image

தென்காசியை சேர்ந்தவர் முத்துராஜ் நட்டாலம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற விரக்தியில் முத்துராஜ் பாலசுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது நண்பரது வீட்டில் மார்.6 ம் தேதி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து குமரி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

News March 14, 2026

குமரி: கடை உரிமையாளரை கத்தியால் வெட்டிய ஊழியர்

image

அருமனை அருகே ஜெஸ்டின் என்பவர் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வேலை பார்க்கும் ரெஞ்சித் சில நாட்களாக வேலைக்கு வராததை ஜெஸ்டின் கண்டித்துள்ளார். இதனால் நேற்று முன் தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரெஞ்சித் கடைக்குள் இருந்த வெட்டு கத்தியை எடுத்து ஜெஸ்டினை தலையில் வெட்டி விட்டு தப்பியோடினார். இதுகுறித்து ஜெஸ்டின் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் ரெஞ்சிதை கைது செய்தனர்.

News March 13, 2026

குமரி : குறைந்த வட்டியில் ₹10 லட்சம் கடன்

image

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருட முன்அனுபவம் தேவை. விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!