News August 29, 2025
BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை தலைகீழாக மாறியது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலையில் ₹520, பிற்பகலில் ₹520 என ஒரேநாளில் ₹1040 உயர்ந்து சவரன் ₹76,260-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ₹76,000-ஐ கடப்பது இதுவே முதல்முறை.
Similar News
News August 29, 2025
மகளிருக்கு ₹5,000 மானியம்… தமிழக அரசு அறிவிப்பு

மகளிர் வணிக ரீதியிலான <<17552261>>கிரைண்டர் வாங்க<<>> தமிழக அரசு ₹5,000 மானியம் வழங்கி வருகிறது. 25 வயதிற்கு மேல் உள்ள மகளிருக்கே இந்த திட்டம் பொருந்தும். கைம்பெண், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆண்டு வருமானம் ₹1.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியான பெண்கள் வரும் செப்.1-ம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொண்டு மானியம் பெறலாம். SHARE IT.
News August 29, 2025
உண்மையான கூட்டாட்சியை உருவாக்குவோம்: CM அழைப்பு

அனைத்து மாநில முதல்வர்களுக்கும், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் CM ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மத்திய-மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது கட்டாயம் என தெரிவித்துள்ளார். இந்த முயற்சியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து கூட்டாட்சியை அடிப்படையாக கொண்ட நாட்டை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 29, 2025
BEAUTY TIPS: ஆண்களே இதை கவனிக்கிறீர்களா?

ஹேர் ஸ்டைலில் அதிக கவனம் செலுத்தும் ஆண்கள், தலைமுடி பராமரிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஷாம்புவை தேர்வு செய்யும்போது பின்வரும் அம்சங்களை கவனிக்கவும்: ▶Scalp-க்கு ஏற்ற ஷாம்புவை தேர்வு செய்யவும். ▶வறண்ட முடிக்கு சல்பேட் ஃப்ரீ ஷாம்பு சிறந்தது. ▶ஆயில் Scalp-க்கு clarifying ஷாம்பு ▶முடி உதிர்வுக்கு காஃபைன் ஷாம்பு ▶பொடுகு தொல்லைக்கு டாக்டர் பரிந்துரைக்கும் ஷாம்பு பயன்படுத்தவும். SHARE IT!