News August 29, 2025

செங்கல்பட்டு: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

செங்கல்பட்டு மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் <>இங்கு கிளிக்<<>> செய்து 17.09.2025க்குள் விண்ணபிக்கலாம். B.Sc, B.E. படித்த நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 2, 2025

செங்கல்பட்டில் வீடு வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் செங்கல்பட்டு பரனூர் ஏரியின் அருகில் 53 கிரவுண்ட் இடத்தில் 698 முதல் 1,127 சதுர அடியில் வெவ்வேறு அளவுகளில் 15 மாடிகள் கொண்ட 116 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடுகள் 39.58 லட்சம் முதல் 66 லட்சம் வரையிலான விலைகளில் உள்ளது. குலுக்கல் முறையில் பெற விரும்புவோர் செப். 5ம் தேதிக்குள் https://tnhb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .

News September 2, 2025

செங்கல்பட்டு: கோயில் நடை நேரம் மாற்றம்

image

திருப்போரூர் கந்த சுவாமி கோயிலில், நாள்தோறும் காலை 6மணி முதல் மதியம் 12:30மணி வரையும், மாலை 3:30மணி முதல், இரவு 8:30மணி வரையும் கோயில் நடை திறக்கப்பட்டு சாத்தப்படும். இந்நிலையில் வரும் செப். 7 ந்தேதி சந்திர கிரகணம் என்பதால் காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். அதன் பின்னர் மறுநாள் 8-ந்தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 2, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(செப்.02) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.

▶️ ஐ.எம்.ஏ ஹால் மேற்கு தாம்பரம்
▶️ இந்திரா நாராயண மஹால், செங்கல்பட்டு
▶️ பெருக்கரணை சமுதாயக்கூடம், சித்தாமூர்
▶️ நூலக கட்டடம், அச்சரப்பாக்கம்
▶️ கணேஷ் மகால், திருப்போரூர்
▶️ கிராம ஊராட்சி மன்ற அலுவலகம், காட்டங்கொளத்தூர்
பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளித்து பயன்பெறலாம்

error: Content is protected !!