News August 29, 2025
பொது அறிவு வினா விடை பதில்கள்

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு <<17550435>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. 26 ஜனவரி, 1950.
2. தேம்பாவணி.
3. லித்தியம்.
4. பெங்களூரு.
5. சுனில் கவாஸ்கர்.
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
Similar News
News September 2, 2025
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பு, அந்நிய நிதி வெளியேற்றம் போன்ற காரணங்களால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ₹88.33-ஆக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சமையல் எண்ணெய்கள், பருப்பு, உரங்கள், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும்.
News September 2, 2025
கல்வி நிதியில் அரசியல் வேண்டாம்: அன்பில் மகேஸ்

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கைக்கான கல்வி நிதி ₹600 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார். கல்விநிதி வழங்குவதில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் MP சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் இருப்பதை சுட்டிக்காட்டிய மகேஸ், மத்திய அரசு இனியாவது மனமிரங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
News September 2, 2025
ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: H.ராஜா சாடல்

கடவுள் இல்லை எனக் கூறும் திமுக, 40,000 ஹிந்து கோயில்களை தன் கையில் வைத்துள்ளதாக H.ராஜா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்டியல் பணத்தை மட்டுமே அறநிலையத்துறை எடுத்துச் செல்வதாக சாடினார். மேலும், திமுக ஆட்சியில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அவர், இந்த அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்துக்களின் காணிக்கையில் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.