News August 29, 2025
அண்ணாமலை பேசினாலே போதும்: செல்லூர் ராஜு

உயிரை கொடுத்து உழைத்தாவது EPS-ஐ அரியணையில் அமர வைப்போம் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணாமலை உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம், பாஜகவினருக்கு அவர் கட்டளையிட்டாலே 2026-ல் EPS முதல்வராவார் என செல்லூர் ராஜு கூறியுள்ளார். அண்ணாமலையாலேயே கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்ததாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் இணைந்த பிறகு EPS-ஐ அண்ணாமலை உயர்த்தி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 2, 2025
தோனிக்கு Away போட்டிகளே கிடையாது: ரவி பிஷ்னோய்

IPL தொடரில் தோனிக்கு Away போட்டிகள் என்பதே கிடையாது என்று ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், எந்த மைதானமாக இருந்தாலும் களத்திற்குள் வந்தாலே ‘தோனி தோனி’ என அனைவரும் ஆர்ப்பரிக்க தொடங்கி விடுகின்றனர் என நெகிழ்ந்துள்ளார். மேலும், தன் மீதான சந்தேகங்களை தவறு என தொடர்ந்து அவர் நிரூபிப்பதாலேயே இன்னும் அவர் விளையாடி வருகிறார் என்றார். தோனி என்றதும் நினைவுக்கு வருவது என்ன?
News September 2, 2025
விஜய் சேதுபதிக்கான கதையில் நடிக்கும் சூரி?

சூரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், சூரி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ‘மாமன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
News September 2, 2025
அண்ணாதுரை பொன்மொழிகள்

*கண்டனத்தை தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லை என்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.
*எதிரிகள் தாக்கித்தாக்கி தங்களது வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித்தாங்கி வலுவை பெற்றுகொள்ளுங்கள்.
*நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
*பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துவிட்ட பிறகு, மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.