News August 29, 2025
கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்.. தமிழ் நடிகர் மீது புகார்!

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக <<17211938>>ஜாய் கிரிஸில்டா<<>> சென்னை கமிஷனர் ஆபீசில் புகார் அளித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த மாதம் தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா X தளத்தில் பதிவிட்ட நிலையில், தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவாகரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காத ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
Similar News
News September 4, 2025
சட்டம் அறிவோம்: கணவன் மீது பொய் டவுரி கேஸ் அளித்தால்..

அப்பாவியான பல ஆண்கள் மீதும், பொய்யான வரதட்சணை வழக்குகள் அளிக்கப்படுகிறது. அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள முடியாமல், பலரும் அவமானத்தில் கூனி குருகி போகின்றனர். அப்படியான ஆண்களுக்கு BNS Section 255 உதவும். பொய் புகார் என்பது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவருக்கு 2 முதல் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். இது ஆண்களுக்கான நீதியை நிலைநிறுத்தும் வலுவான சட்டமாகும். SHARE IT.
News September 4, 2025
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

மிலாடி நபி பண்டிகையையொட்டி நாளை(செப்.5) அரசு விடுமுறையாகும். இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி முதல் காலாண்டு தேர்வுகள் தொடங்கவிருப்பதால் பரீட்சைக்கு படிக்க இந்த தொடர் விடுமுறை பயன்படும் என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த 3 நாள் விடுமுறையில் உங்கள் பிளான் என்ன?
News September 4, 2025
GST மாற்றத்தால் ஏழைகளுக்கு பயன்: ராமதாஸ் வரவேற்பு

மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையை ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களின் மீதான வரிகளைக் குறைத்ததன் மூலம், ஏழை பாட்டாளிகள் மீதான பணச்சுமை குறைவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக மத்திய அரசை பாராட்டலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.