News August 29, 2025
BREAKING: ஆபரணத் தங்கம் விலை பயங்கர மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை 4-வது நாளாக உயர்ந்து, ₹76 ஆயிரத்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹520 உயர்ந்து ₹75,760-க்கும், கிராமுக்கு ₹65 உயர்ந்து ₹9,470-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹131-க்கும், கிலோ வெள்ளி ₹1,000 உயர்ந்து ₹1,31,000-க்கும் விற்பனையாகிறது.
Similar News
News August 29, 2025
ரஜினிக்கு பாராட்டு விழா: விஷால்

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் விரைவில் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் சங்க கட்டுமான பணிகள் நடைபெறுவதால், பாராட்டு விழாவிற்கான தேதி விரைவில் பரிசீலிக்கப்படும் எனவும், சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்லும் விஜயின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
BCCI-ன் புதிய இடைக்கால தலைவர் நியமனம்

BCCI இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. BCCI தலைவர் ரோஜர் பின்னியின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து, வரும் செப்டம்பரில் BCCI பொதுக்கூட்டம் மற்றும் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை சுக்லா தலைவராக செயல்படுவார் என கூறப்படுகிறது. கடந்த 2020 டிசம்பர் 18-ம் தேதி சுக்லா BCCI-யின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
News August 29, 2025
திமுக அரசை கடுமையாக சாடிய அண்ணாமலை

திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தனது X பதிவில் 2023 – 2024 கல்வியாண்டில் 42.23% ஆக இருந்த சேர்க்கை விகிதம் நடப்பு கல்வியாண்டில், 37.92% ஆக குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளை விட தனியாரில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளதாகவும், இந்த அரசு வெற்று விளம்பர அரசு என்றும் சாடியுள்ளார்.