News August 29, 2025
மாற்றம் உண்டாகும்.. தேமுதிக சிக்னல்

விஜய் கட்சி தொடங்கியது முதலே, தமிழக அரசியலில் மாற்றம் நிகழும் என பலரும் கூறி வருகின்றனர். 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என TTV தினகரனும் கூறியிருந்தார். இந்நிலையில், இதே கருத்தையே பிரேமலதாவும் முன்னிறுத்தியுள்ளார். 2006-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் மீண்டும் நடைபெறலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே DMDK உடன் TVK கைகோர்க்கவுள்ளதாக பேசப்படும் நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
Similar News
News September 1, 2025
வேலை போய்விடுமோ என்று பயந்தால்…

தினசரி பிரச்னைகளால் ஏற்படும் மனஅழுத்தம் போதாதென்று, வேலை போய்விடுமோ என்ற அச்சம் ஒருவரின் குணநலத்தை பெரிதும் பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலை போய்விடும் என்ற சூழ்நிலை நீண்டகால அளவில் ஒருவரின் மன சமநிலையை பாதிக்கிறது, முரண்டுபிடிக்கும் மனநிலையும் ஏற்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உங்கள் திறன்களை எப்போதும் அப்டேட்டில் வைத்திருங்கள். இந்த வேலை போனால், இன்னொரு வேலை கிடைக்கும்!
News September 1, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய மாற்றம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் kmut.tn.gov.in இணையதளத்தில் அரசு புதிய மாற்றம் செய்துள்ளது. விண்ணப்பங்களின் நிலையை அறியும் பகுதியில், ‘அதிகாரிகள் உள்நுழைவு’, ‘பொதுமக்கள் உள்நுழைவு’ என 2 ஆப்சன்கள் இருந்தன. தற்போது அதிகாரிகள் மட்டுமே விண்ணப்ப நிலையை அறியும்படி மாற்றப்பட்டுள்ளது. விரைவில் திட்டத்தில் புதிதாக இணைபவர்களின் பட்டியலை அரசு வெளியிட இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.
News September 1, 2025
CM ஸ்டாலின் வீண் விளம்பரம் செய்கிறார் : அண்ணாமலை

CM ஸ்டாலின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையை பார்வையிட்டதை அண்ணாமலை விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், அந்த பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே தமிழ் துறை மூடப்பட்டதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே CM ஸ்டாலின் வீண் விளம்பரங்களை நிறுத்திவிட்டு, அங்கு மீண்டும் தமிழ் துறையை கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.