News August 29, 2025

சளித் தொல்லையை விரட்டும் கற்பூரவள்ளி தேநீர்!

image

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கற்பூரவள்ளி தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி கற்பூரவள்ளி இலை, சுக்கு, மிளகு, துளசி, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பிறகு, அதில் பனங்கற்கண்டு சேர்த்தால் கற்பூரவள்ளி தேநீர் ரெடி. இதை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம். SHARE IT.

Similar News

News September 1, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய மாற்றம்

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் kmut.tn.gov.in இணையதளத்தில் அரசு புதிய மாற்றம் செய்துள்ளது. விண்ணப்பங்களின் நிலையை அறியும் பகுதியில், ‘அதிகாரிகள் உள்நுழைவு’, ‘பொதுமக்கள் உள்நுழைவு’ என 2 ஆப்சன்கள் இருந்தன. தற்போது அதிகாரிகள் மட்டுமே விண்ணப்ப நிலையை அறியும்படி மாற்றப்பட்டுள்ளது. விரைவில் திட்டத்தில் புதிதாக இணைபவர்களின் பட்டியலை அரசு வெளியிட இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

News September 1, 2025

CM ஸ்டாலின் வீண் விளம்பரம் செய்கிறார் : அண்ணாமலை

image

CM ஸ்டாலின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையை பார்வையிட்டதை அண்ணாமலை விமர்சித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், அந்த பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே தமிழ் துறை மூடப்பட்டதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே CM ஸ்டாலின் வீண் விளம்பரங்களை நிறுத்திவிட்டு, அங்கு மீண்டும் தமிழ் துறையை கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News September 1, 2025

இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுகிறீர்களா?

image

டாக்டர் சொல்லாமலே இரும்புச்சத்து மாத்திரை (iron tablets) உட்கொள்ளும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், இது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் கல்லீரல், இதயம், கணையம், மூளை போன்ற உள்ளுறுப்புகள் சேதமடையலாம் என்றும், சோர்வு & மனநலப் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் வார்னிங் தருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு இம்மாத்திரைகளை தரும்முன் டாக்டரிடம் ஆலோசியுங்கள்.

error: Content is protected !!