News August 29, 2025
தி.மலையில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’

தி.மலை, வெம்பாக்கம், புதுப்பாளையம், வசய்யார், தண் டராம்பட்டு ஆகிய பகுதிகளில் இன்று(ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் இடம் குறித்த விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இம்முகாமில் மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்கள், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தும் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 3, 2025
தி.மலை: நாய் குறுக்கே வந்து சிறுமி பலி

தி.மலை ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி தமிழ்செல்வி, மகள் அனாமிகா மூவரும் நேற்று சேத்துப்பட்டு அருகே பைக்கில் சென்ற போது, 10க்கும் மேற்பட்ட நாய்கள் சண்டையிட்டு கொண்டு பைக் மீது பாய்ந்ததில் மூவரும் கீழே விழுந்தனர். இதில் சிறுமி அனாமிகா பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். தெருநாய்கள் பிரச்சனை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 3, 2025
பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அவர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின் நோக்கம், பேரிடரின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவது ஆகும்.
News September 2, 2025
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., ஆகியோர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்வில் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.