News August 29, 2025

திருவள்ளூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News September 1, 2025

திருவள்ளூர்: சென்னைக்கே தண்ணி தரும் நம்ம ஊரு

image

திருவள்ளூர், சென்னையின் முக்கிய நீராதரமாக உள்ளது கொசஸ்தலை ஆறு. இதில் சாலா, துண்டு மீன், அலாத்தி, சீடை மீன், மது கெண்ட, கெளுத்தி, இரு கெளுத்தி போன்ற வகை மீன்கள் கிடைக்கின்றன. இதனால் இந்த ஆறு சுமார் 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.3757 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த ஆறு அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை விட இரண்டு மடங்கு அதிக நீர் பிடிப்பை கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 1, 2025

திருவள்ளூர்: டாஸ்மாக் விடுமுறை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், FL2, FL3 ஹோட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் செப்டம்பர் 5 மிலாடி நபி தினத்தை முன்னிட்டு கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்தார்.

News September 1, 2025

திருவள்ளூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இதை பாருங்க

image

திருவள்ளூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!