News August 29, 2025

டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு.. புதிய டிஜிபி யார்?

image

சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், வீட்டுவசதி துறை டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தின் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதிய டிஜிபி நியமிக்கப்படும் வரை பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனை அரசு நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar News

News August 29, 2025

100 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்.. சொதப்பிய ஷமி

image

துலீப் டிராபி தொடரில் East Zone அணிக்காக விளையாடும் ஷமி, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 9 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட்டில் மீண்டும் களமிறங்கியுள்ள அவர், North Zone-க்கு எதிரான ஆட்டத்தில், 23 ஓவர்களை வீசி 100 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
மேலும், வெறும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். ஃபிட்னஸ் பிரச்னை காரணமாக 2023 WTC-க்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

News August 29, 2025

BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை தலைகீழாக மாறியது

image

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலையில் ₹520, பிற்பகலில் ₹520 என ஒரேநாளில் ₹1040 உயர்ந்து சவரன் ₹76,260-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ₹76,000-ஐ கடப்பது இதுவே முதல்முறை.

News August 29, 2025

GST சீர்திருத்தங்கள் பலன் அளிக்காது: CM ஸ்டாலின்

image

மாநில வருவாயை பாதுகாக்காமல் GST சீர்திருத்தங்கள் மக்களுக்கு பலன் அளிக்காது என CM ஸ்டாலின் கூறியுள்ளார். GST-ல் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக TN உள்பட பாஜக ஆளாத மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், சீர்திருத்தத்தின் நோக்கத்தை வரவேற்கும் அதேநேரம், எந்தவொரு குறைப்பும் நலத்திட்டங்களை தக்கவைக்கும் மாநில வருவாயை பாதிக்கக்கூடாது என கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!