News August 29, 2025
‘சிவாஜி’ படத்தில் நடிக்காதது ஏன்? மனம் திறந்த சத்யராஜ்

39 ஆண்டுகளுக்கு பின் ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் நடித்திருந்தார். ஆனால், ‘சிவாஜி’ படத்திலேயே மிகப்பெரிய சம்பளத்துடன் நடிக்க வாய்ப்பு வந்தும், அதை சத்யராஜ் ஏற்கவில்லை. அந்த வாய்ப்பை ஏன் ஏற்கவில்லை என சத்யராஜ் இப்போது மனம் திறந்துள்ளார். அதாவது, நடிகராக தனக்கு மார்க்கெட் குறைந்து கொண்டிருந்த நேரம் அது என்பதால், வில்லனாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
Similar News
News August 29, 2025
செப்.1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்

*SBI-ல் Auto Debit முறை தோல்வியடைந்தால் 2% அபராதம் விதிக்கப்படும். சர்வதேச பரிவர்த்தனையாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
*பதிவு தபால், விரைவு தபால் உடன் இணைக்கப்பட்ட சேவை அமலுக்கு வருகிறது.
*LPG சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளது. *வெள்ளிக்கும் ஹால்மார்க்கை கட்டாயமாக்கும் நடைமுறை அமலுக்கு வர அரசு முனைப்பு காட்டும்.
News August 29, 2025
மகளிருக்கு ₹5,000.. உடனே இதை பண்ணுங்க

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வணிக ரீதியிலான கிரைண்டர் வாங்க தமிழக அரசு உதவி வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சென்னை உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்கள் தற்போது அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி, கிரைண்டர் விலையில் மானியமாக 50% (அ) ₹5,000 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் செப். 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 29, 2025
மாணவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை!

லைக்ஸ், ரீல்ஸ் என சோஷியல் மீடியாவில் இளம் தலைமுறையினர் எந்நேரமும் மூழ்கி இருக்கின்றனர். இது அவர்களின் படிப்பை பாதிப்பதாக கூறி, அசாமில் ஒரு பள்ளி சோஷியல் மீடியாவை பயன்படுத்த மாணவர்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த முடிவை பலரும் வரவேற்கின்றனர். அதே நேரத்தில், இப்படி முழுமையாக தடை விதிக்காமல், மாணவர்களுக்கு ‘Digital Literacy’ சொல்லி கொடுக்க வேண்டும் எனவும் விமர்சிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?