News August 29, 2025

ஆயுள்காலம் அதிகரிக்க இதுதான் ஒரே வழி…

image

இந்தியாவின் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலத்தை 3.5 ஆண்டுகள் அதகரிக்கலாமாம். உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு குறைந்ததால், டெல்லி மக்களின் ஆயுள்காலம் 8.2 ஆண்டுகளாக அதிகரிக்கும் எனவும் சிகாகோ பல்கலையின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மாசு குறைந்து ஆயுட்காலம் அதிகரிக்க வாய்ப்பிருக்கா மக்களே?

Similar News

News August 29, 2025

டாக்டரை கேட்காமல் மருந்து சாப்பிடுறீங்களா? உஷார்

image

நீங்க சாப்பிடுற சில மருந்துகள்ல ரெட் லைன் இருக்கும் பார்த்திருக்கீங்களா? இந்த லைனுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? பொதுவா மருத்துவரிடம் போகாம, சிலர் medical-ல மருந்து வாங்கி சாப்பிடுவாங்க. அப்படி டாக்டர கேட்காம எடுக்கவே கூடாதுன்னு கருதபடுற மாத்திரைகள்ல தான் இந்த மாதிரி ரெட் லைன் இருக்கும். இதனால் உடலுக்கு பல பிரச்னைகள் வரலாம்னு நிபுணர்கள் சொல்றாங்க. உஷார்!

News August 29, 2025

அறிமுக போட்டியிலேயே 200.. அசத்திய இளம் வீரர்!

image

துலீப் டிராபி தொடரில், Central Zone வீரர் டேனிஷ் மால்வர் தனது அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து கவனம் ஈர்த்துள்ளார். North Zone-க்கு எதிரான போட்டியில் அவர், 222 பந்துகளில் 203 ரன்கள் விளாசி Retired hurt ஆனார். அவரது இன்னிங்ஸில் 36 பவுண்டரிகள் & ஒரு சிக்ஸரும் அடங்கும். இந்த போட்டியில் Central Zone அணி தற்போது 3 விக்கெட்கள் இழப்புக்கு 488 ரன்களை குவித்துள்ளது.

News August 29, 2025

BREAKING: இபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வெளியானது

image

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து சிவில் வழக்கு தொடர அனுமதியில்லை என்று ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஜெ., மறைவுக்குப்பின், அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து, கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் உள்ளிட்டோர் வழக்கு தொடர தனி நீதிபதி அனுமதி அளித்திருந்தார். இதை எதிர்த்து EPS தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.

error: Content is protected !!