News August 29, 2025
‘ஜனநாயகன்’ 1st சிங்கிள்: பேரே மாஸா இருக்கே ரிலீஸ் எப்போ?

‘ஜனநாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் தீபாவளி பட்டாசாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘தளபதி கச்சேரி’ என்ற அந்த பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அனிருத் உருவாக்கி இருக்கிறாராம். அதேபோல் MGR நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் வரும் ‘நான் ஆணையிட்டால்’ பாடலின் Remix-ம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Similar News
News August 29, 2025
100 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்.. சொதப்பிய ஷமி

துலீப் டிராபி தொடரில் East Zone அணிக்காக விளையாடும் ஷமி, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 9 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட்டில் மீண்டும் களமிறங்கியுள்ள அவர், North Zone-க்கு எதிரான ஆட்டத்தில், 23 ஓவர்களை வீசி 100 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
மேலும், வெறும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். ஃபிட்னஸ் பிரச்னை காரணமாக 2023 WTC-க்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
News August 29, 2025
BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை தலைகீழாக மாறியது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. காலையில் ₹520, பிற்பகலில் ₹520 என ஒரேநாளில் ₹1040 உயர்ந்து சவரன் ₹76,260-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ₹76,000-ஐ கடப்பது இதுவே முதல்முறை.
News August 29, 2025
GST சீர்திருத்தங்கள் பலன் அளிக்காது: CM ஸ்டாலின்

மாநில வருவாயை பாதுகாக்காமல் GST சீர்திருத்தங்கள் மக்களுக்கு பலன் அளிக்காது என CM ஸ்டாலின் கூறியுள்ளார். GST-ல் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக TN உள்பட பாஜக ஆளாத மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், சீர்திருத்தத்தின் நோக்கத்தை வரவேற்கும் அதேநேரம், எந்தவொரு குறைப்பும் நலத்திட்டங்களை தக்கவைக்கும் மாநில வருவாயை பாதிக்கக்கூடாது என கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.