News August 29, 2025
ஈரோடு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெரும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ அரசு பொது சேவை முகாம் நாளை (ஆக. 29) நடைபெற உள்ளது. இந்த முகாம் ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3 (தமிழ்நாடு ஹவுசிங் போர்டு அலுவலகம், சூரம்பட்டி 4 ரோடு), சத்தியமங்கலம் நகராட்சி (வன்னியர் மஹால்), பெத்தாம்பாளையம் தொகுதி (ஆண்டவர் திருமண மண்டபம்), நம்பியூர் பிளாக் (பெருமாள் கோவில் மண்டபம், வேமாண்டம்பாளையம்) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
Similar News
News August 29, 2025
ஈரோட்டில் அரசு வேலை : விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களில் 2,513 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 83 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. சம்பளமாக ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வழங்கப்படும். விண்ணபிக்க இன்றே கடைசி நாளாகும், எனவே https://www.drberd.in/index.php என்ற இணையதளத்திற்கு சென்று உடனே விண்ணப்பிக்கவும். அரசு வேலை பெற அருமையான வாய்ப்பு இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்.
News August 29, 2025
ஈரோட்டில் GH-ல் வேலைவாய்ப்பு!

ஈரோடு, அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு காலி பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்படவுள்ளது. இந்த பணியிடங்களுக்கு www.erode.nic.in என்ற இணையதளத்தில் உள் விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு 04.09.2025க்குள் அனுப்ப வேண்டும். முகவரி: நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், திண்டல்,ஈரோடு-638012.SHAREit
News August 29, 2025
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டுகோள்

ஈரோடு, இந்து முன்னணி சார்பில், கோபியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற ஹெச்.ராஜா,பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% வரிவிதித்துள்ளது. இதனால், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலத்தில் கொண்டுவரபட்ட ‘காட்’ உடன்படிக்கை தோற்றுப்போயுள்ளது. நாட்டு மக்கள் சுதேசி உற்பத்திப் பொருட்களை வாங்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.