News August 29, 2025

அரியலூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் 30ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. முகாமில் அனைத்து நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கின்றனர். எனவே முகாமில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் உடலை முழு பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்

Similar News

News August 29, 2025

அரியலூர்:மகளிர் உரிமைத்தொகை பெற இத செய்ங்க!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில் கிளிக் செய்து<<>> அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News August 29, 2025

அரியலூர்: முகாமினை பார்வையிட்ட ஆட்சியர்

image

அரியலூர் மாவட்டம், குவாகம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி நேரில் பார்வையிட்டார். இம்முகாம்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 03 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நடைபெற்ற முகாமில் மொத்தம் 1667 மனுக்கள் பெறப்பட்டது.

News August 28, 2025

அரியலூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு அரியலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04329-223333) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

error: Content is protected !!