News August 28, 2025
நடிகர் மாதவன் ஆபத்தில் சிக்கினார்

நடிகர் மாதவன் லடாக்கில் உள்ள லே பகுதியில் கடும் மழையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், ‘2008-ல் ‘3 இடியட்ஸ்’ ஷூட்டிங்கின்போது பனிப்பொழிவில் சிக்கினேன். இப்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு லேயில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார். J&K-வில் கனமழை, வெள்ளத்தால் இதுவரை 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Similar News
News August 29, 2025
இப்போது தேர்தல் நடந்தால்… இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், நிதிஷ், சந்திரபாபு நாயுடுவின் ஆதரவால் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கைப்பற்றியது. ஆனால், தற்போது தேர்தல் நடந்தால், பாஜக + 324, காங்., + 208 இடங்களில் வெற்றிபெறும் என்று இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 2,06,826 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
News August 29, 2025
சளித் தொல்லையை விரட்டும் கற்பூரவள்ளி தேநீர்!

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கற்பூரவள்ளி தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி கற்பூரவள்ளி இலை, சுக்கு, மிளகு, துளசி, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பிறகு, அதில் பனங்கற்கண்டு சேர்த்தால் கற்பூரவள்ளி தேநீர் ரெடி. இதை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம். SHARE IT.
News August 29, 2025
6 குழந்தை கூட பெத்துப்போம்.. சீமான்

மக்கள்தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு இந்திய தம்பதியும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மோகன் பகவத் கூறினார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய சீமான், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு கொண்டு வர முடியாது என்றார். நான் 6 பிள்ளைகளைக் கூட பெற்றுக்கொள்வேன் எனக் கூறிய அவர், இனி இருவருக்கு அறுவரா? என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று நீங்கள் சொல்லக்கூடாது என்றும் அவர் சாடியுள்ளார்.