News August 28, 2025
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டது 3 பேர் மட்டுமே: NIA

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் 3 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகள் மட்டுமே இருப்பதாக NIA உறுதி செய்துள்ளது. ஆபரேஷன் மகாதேவின் போது 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், NIA-ன் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. 4-க்கும் அதிகமான தீவிரவாதிகள் இருந்ததாக தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர் போலீசாரின் கூற்றை NIA மறுத்துள்ளது.
Similar News
News August 29, 2025
முதுகு வலியை விரட்டும் ‘அஸ்வ சஞ்சலாசனம்’

✦வேலையில் உட்கார்ந்தே இருப்பவர்களின் முதுகு வலிக்கு சிறந்த தீர்வு.
➥நெஞ்சு தரையை பார்த்த படி, கைகளை தரையில் ஊனி, இரு கால்களையும் பின்னோக்கி நீட்டி இருக்கும் நிலைக்கு வாருங்கள்.
➥மெல்ல மூச்சை உள்ளே இழுத்து, ஒரு காலை மட்டும் மடக்கி, கைகளுக்கு அருகில் வைக்கவும்.
➥15-20 விநாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News August 29, 2025
ஸ்டாலினின் Patch Work மாடல்: அண்ணாமலை தாக்கு

உற்பத்தி துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த கால பெருமைகளை அனுபவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக அரசு, மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியில் கவனம் செலுத்த தவறிவிட்டதாக சாடியுள்ளார். CM-ன் பெருமிதம் வெறும் Patch Work மட்டுமே என்று விமர்சித்த அவர், இவை காகிதத்தில் இருக்கும் புள்ளிவிவரங்கள் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
News August 29, 2025
பேய் படத்தில் ராஷ்மிகா மந்தனா

தமிழில் எத்தனை பேய் படங்கள் வந்தாலும் காஞ்சனாவுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஏற்கெனவே 3 பாகங்கள் வெளியான நிலையில் தற்போது ‘காஞ்சனா – 4’ படத்தை ராகவா லாரன்ஸ் எடுத்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே, நோரா படேஹி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இதில் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாஷ் பேக்கில் ராஷ்மிகா வருகிறாராம். அப்போ பேய்யா இருப்பாரோ?