News August 28, 2025
அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி: கெஜ்ரிவால் கோரிக்கை

டிரம்ப் ஒரு கோழை என்று அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். தன்னை எதிர்க்கும் நாடுகளுக்கு அடிபணியும் டிரம்ப் முன்பு, நமது பிரதமர் அமைதியாக இருப்பது ஏன் என தெரியவில்லை எனவும், அமெரிக்கா 50% வரிவிதித்தால், இந்தியா 100% வரிவிதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், 140 கோடி மக்கள் தொகையும், வலிமையான சந்தையும் கொண்ட நாம் என்ன பலவீனமான நாடா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News August 29, 2025
ரஷ்யாவுக்கு உக்ரைன் கொடுத்த பெரும் அடி

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு எரிபொருள் வழங்கி வந்த ரஷ்யா, தற்போது உள்நாட்டு மக்களின் தேவைக்கே எரிபொருள் வழங்க முடியாமல் திணறி வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறும் உக்ரைன், அதேவேளையில் மற்றொரு புறம் சாதுர்யமாக காய்களை நகர்த்தி வருகிறது.
News August 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 442
▶குறள்: உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
▶ பொருள்: வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
News August 29, 2025
ஆயுள்காலம் அதிகரிக்க இதுதான் ஒரே வழி…

இந்தியாவின் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலத்தை 3.5 ஆண்டுகள் அதகரிக்கலாமாம். உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு குறைந்ததால், டெல்லி மக்களின் ஆயுள்காலம் 8.2 ஆண்டுகளாக அதிகரிக்கும் எனவும் சிகாகோ பல்கலையின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மாசு குறைந்து ஆயுட்காலம் அதிகரிக்க வாய்ப்பிருக்கா மக்களே?