News August 28, 2025

தருமபுரியில் பேச்சுப் போட்டிகள்: மாணவர்களுக்கு அழைப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டுப் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. செப்.1 அண்ணாவுக்கும், செப்.2 பெரியாருக்கும் போட்டிகள் நடைபெறும். தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வுகள் நடக்கும். இதில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 10, 2026

தருமபுரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். *உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க*

News March 10, 2026

தருமபுரி: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

image

தருமபுரி மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் ப<<>>ண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 10, 2026

தருமபுரியில் தட்டி தூக்கிய தவெக

image

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தெற்கு ஒன்றியம் பெரியாம்பட்டி ஊராட்சி ஜொல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று (மார்ச்.09) தவெக-வில் இணைந்தனர். காரிமங்கலம் தவெக தெற்கு ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

error: Content is protected !!