News August 28, 2025

தர்மபுரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தர்மபுரி மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

Similar News

News August 29, 2025

தருமபுரி: இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து!

image

தருமபுரி மக்களே உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்ய வாய்ப்புள்ளது. ஆம் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதை தடுக்கும் நோக்கில் கேஒய்சி சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 31 கடை தேதி ஆகும். இதற்கு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான<> TNPDS போர்ட்டலில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். முடியவில்லை என்றால் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று பயோமெட்ரிக் முறை மூலம் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 29, 2025

தருமபுரி மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ மல்லிகா பேலஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி
▶️ ஊராட்சி மன்ற அலுவலக விளையாட்டு மைதானம், மாரவாடி
▶️ சமுதாயக் கூடம், பூதனஹள்ளி
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜக்குபட்டி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 29, 2025

தர்மபுரி: தேன் எடுக்க சென்றவர் பலி

image

அரூர் அடுத்த கூடலூரை சேர்ந்தவர் நைனாமலை. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கழுத்தில் துண்டை கட்டி கொண்டு மரத்தில் தேன் எடுக்க முயன்றார். அப்போது தேனீக்கள் கொட்டியதால் வேகமாக கீழே இறங்கியதால் கையில் இருந்த சில்வர் பக்கெட் மாட்டிக்கொண்டது. இதனால் கழுத்தில் துண்டு இருக்கவே, இதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

error: Content is protected !!