News August 28, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (ஆக.28) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 29, 2025

கடலூரில் இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.29) விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் கூட்டத்தில் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 29, 2025

கடலூர்: கோவில் பாதுகாவலர் வேலை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள 34 கோயில்களில் பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாதம் ரூ.7300 சம்பளமாக வழங்கப்படும். இதில், பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் உரிய ஆவணங்களுடன், கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-220732 என்ற எண்ணின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE

News August 29, 2025

கடலூரில் நாளை ”உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி

image

கடலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி முகாம் மற்றும் கல்விக்கடன் வழங்கும் முகாம் இன்று (ஆக.29) கடலூர் புனித அன்னாள் பெண்கள் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில். கல்விக் கடன் கோரும் மாணவர்கள் <>vidyalakshmi <<>>என்ற இணையவழி மூலமாக விண்ணப்பித்தும், உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!