News August 28, 2025
மயிலாடுதுறை: இலவச சட்ட உதவி வேண்டுமா?

மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு 044–25342441 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
Similar News
News August 29, 2025
மயிலாடுதுறையை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நதியின் வளமான டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து பழையார் வரை வங்காள விரிகுடாவின் கடற்கரையோரமாக சுமார் 70.9 கிலோமீட்டர் (44.1 மைல்) கடற்கரை நீளத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,169.30 சதுர கிலோமீட்டர்கள் (451.47 சதுர மைல்) ஆகும். இது மாநிலத்தின் பரப்பளவில் 0.90% ஆகும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 29, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
News August 28, 2025
ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்தும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றர்.