News August 28, 2025
Beauty: முடி நிக்காம வளரணுமா? இதை செய்து பாருங்க..

உங்களுக்கு முடி உதிர்வு, இளநரை, வறண்ட முடி, பொடுகு தொல்லை என அனைத்தும் இருக்கிறதா? இவை அனைத்தையும் ஒரேயொரு பொருளை வைத்து சரி செய்யலாம். அதுதான் அன்னாசி பூ. ▶முதலில், அன்னாசி பூவை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் ▶அதை தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடுங்கள் ▶வடிகட்டிய பிறகு அந்த எண்ணையை வாரத்திற்கு இருமுறை தலைக்கு பயன்படுத்துங்கள். SHARE.
Similar News
News March 6, 2026
மாணவர்களை தவிக்க விட்ட திமுக அரசு: அன்புமணி

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் சாதி & வருவாய்ச் சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். அதுபோல, கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்கான அடங்கல் ஆவணமும் உழவர்களுக்கு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். எனவே, வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை திமுக அரசு முடிவுக்கு கொண்டு வருமாறு அவர் X பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
News March 6, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 629 ▶குறள்:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.
News March 6, 2026
CINEMA 360°: பிரதீப்பின் சம்பளம் ₹50 கோடி

*ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘Ordinary Man’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியது *சமுத்திரக்கனியின் ‘கார்மேனி செல்வம்’ ஏப்.3-ல் ரிலீசாகும் என அறிவிப்பு *செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் டீசர் வெளியானது *தனது அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் ₹50 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் *மலையாள இயக்குநர் தின்ஜித்திடம்(EKO) தனுஷ் கதை கேட்டுள்ளாராம் *ஜீவாவின் ‘TTT’ 50 நாள்களை கடந்தது


