News August 28, 2025

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு? ஷமி சொன்ன அடடா பதில்

image

தனக்கு போர் அடிக்கும் போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என முகமது ஷமி தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் எனவும், 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெற வேண்டும் என்பது தான் தன்னுடைய தற்போதைய இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2027-ல் உலகக்கோப்பையை தாய்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 14, 2026

விஜய்யின் ஒப்புதல் இன்றி இது நடைபெறாது: துரை வைகோ

image

எடுத்த முடிவில் உறுதியாக இருந்தால்தான், மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும் என விஜய்க்கு துரை வைகோ அறிவுறுத்தியுள்ளார். திமுக, பாஜகவை எதிரி எதிர்த்துதான் அரசியலுக்கு வந்ததாக விஜய் கூறினார்; ஆனால் திடீரென தவெக மா.செ கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் கூட்டணி விரும்புவதாக கூறுவது தலைமையின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது என்பதையே காட்டுகிறது என்றும், விஜய்யின் முடிவு காலப்போக்கில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.

News March 14, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 632 ▶குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. ▶பொருள்: அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

News March 14, 2026

உச்சநீதிமன்ற நிர்வாகத்தை இனி AI கவனிக்கும்!

image

கடந்த 2022-ல் Ex SC CJI சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, தற்போது ஒரு புதிய அமர்வின் முன் மீண்டும் பட்டியலிடப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்த விசாரணையில் SC-ன் பதிவகத்தில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இதையடுத்து வழக்கு ஒதுக்கீடு & அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த CJI சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.

error: Content is protected !!