News August 28, 2025

BREAKING: அனைத்து பள்ளிகளிலும் இனி கட்டாயம்

image

உடற்கல்விக்கென தனி பீரியட் ஒதுக்கப்பட்டாலும், பாடப்புத்தகம் இல்லாமல் இருந்தது. அண்மையில், உடற்கல்விக்காக தனி பாடப்புத்தகத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. தற்போது, 3 -ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை NCERT பாடத்திட்டத்திலும் உடற்கல்வி புத்தகம் அறிமுகமாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட 21 மொழிகளில் ‘கேல் யோகா’ என்ற பெயரில் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி P.E.T பீரியட்லயும் படிக்கணும் போலயே..!

Similar News

News March 16, 2026

தமிழ்நாடு தேர்தல்.. சற்றுமுன் புதிய அறிவிப்பு

image

தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக பின்பற்ற தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ECI உத்தரவிட்டுள்ளது. *அமைச்சர்கள் அரசு வாகனங்களை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்த தடை. *தனியார் இடத்தில் உரிமையாளர்கள் அனுமதி இல்லாமல் போஸ்டர், பேனர் வைக்கக்கூடாது. *தேர்தல் தொடர்பான புகாரை 1950 என்ற எண்ணில் தெரிவித்தால், 100 நிமிடங்களில் நடவடிக்கை. *5,173 பறக்கும் படைகள் களத்தில் உள்ளதாக ECI தெரிவித்துள்ளது.

News March 16, 2026

தனிநபர் விமர்சனத்தை தவிர்க்கவும்: மு.க.ஸ்டாலின்

image

பரப்புரையின்போது தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் என்று திமுக மா.செ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 5 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டும் என்றும், கடந்த தேர்தல்களில் வாக்குகள் குறைவாக பெற்ற இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி கட்சியினருடன் திமுகவினர் இணைந்து செயல்படவும் ஆலோசனை கூறியுள்ளார்.

News March 16, 2026

தேர்தல்: மதுபான கடை நேரம் குறைப்பு

image

புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் குடோன்களில் இருந்து காலை 10 – மாலை 5 மணி வரை மட்டுமே மதுபானங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும் கலால் துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக இரவு 11 மணி வரை மதுக்கடைகளும், 12 மணி வரை ரெஸ்ட்டோ பார்களும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!