News August 28, 2025
கனமழை வெளுத்து வாங்கும்: IMD

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்நிலையில், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நீலகிரியில் சுமார் 6 மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், இரவு 7 மணி வரை கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?
Similar News
News March 20, 2026
போன்களில் Pre-install-ஆக வரும் ஆதார் ஆப்?

போன்களில் Clock, Calculator போலவே ஆதார் ஆப்பையும் Pre-install முறையில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ஜனவரியில் செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு Email அனுப்பியுள்ளது. ஆனால், இதனால் தனியுரிமை பாதிக்கப்படும் என்றும், இந்தியாவில் விற்பனை செய்வதற்காகவே தனியாக தயாரிப்பை மேற்கொள்வது சாத்தியமில்லாதது எனக்கூறி சாம்சங், ஆப்பிள் நிறுவனங்கள் இத்திட்டத்தை மறுத்துள்ளன.
News March 20, 2026
சீட்டுக்கு பணம் பெற்று மோசடி.. திமுக தலைமை அதிர்ச்சி!

MLA சீட்டு வாங்கி தருவதாக கூறி OPS ஆதரவாளர் ₹1 கோடி மோசடி செய்த சம்பவம் திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். பெரியகுளம் கவுன்சிலரான சுதாவின் கணவர் நாகலிங்கம், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட OPS-ன் ஆதரவாளரான அபுதாஹிரிடம் பணத்தை கொடுத்துள்ளார். இதில், ஆசிஃப் ராஜா, கார்த்திக் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தில், எங்கே தவறு நடந்தது என திமுக விசாரணையில் இறங்கியுள்ளது.
News March 20, 2026
பசுவின் பித்தப்பை கல்லுக்கு ₹5 லட்சமா?

தலைப்பு ஆச்சரியப்படுத்துகிறதா? சீன பாரம்பரிய மருத்துவத்தில் பித்தப்பை கற்களிலிருந்து, ‘அங்கோங் நியு ஹுவாங் வான்’ என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. பெரிய பசுக்களில் மட்டுமே அரிதாக இந்த கற்கள் கிடைப்பதால், கடந்த 2025-ம் ஆண்டு 28 கிராம் பசுவின் பித்தப்பைக் கற்கள் ₹5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளதாம்.


