News April 9, 2024

கவிதாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் அவர் மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகான அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Similar News

News November 12, 2025

தோல்வியில் இருந்து தப்பிய பிரக்ஞானந்தா

image

உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்​தி​யா​வின் பிரக்ஞானந்​தாவும், பொது வீர​ராக பங்​கேற்​ற டேனியல் துபோவும் மோதினார்கள். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் 14-வது நகர்​வின் போது ராணி முன்​னால் இருந்த சிப்பாயை பிரக்​ஞானந்தா கவனக்​குறை​வாக நகர்த்​தி​னார். இதன்மூலம் டேனியல் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அவசரத்தில் அதை கவனிக்க தவறிவிட்டார். பின்​னர் 41-வது நகர்த்​தலில் ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது.

News November 12, 2025

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் அசத்தல்

image

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முடிவுகளை <>http://upsc.gov.in<<>> என்ற முகவரியில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2,736 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 12, 2025

தனித்தனியாக ஆலோசனை செய்யும் ஸ்டாலின்

image

அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார். அப்போது, 2026 தேர்தலில் கட்டாயம் திமுக வெற்றிபெற வேண்டும; தோல்வியடைந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும், யாரை நிறுத்தினால் வெற்றிபெற முடியும் என்ற கருத்தையும் கேட்டுள்ளார்.

error: Content is protected !!