News August 28, 2025
‘பிரதமர் மோடியை காணவில்லை’

BJP-க்கு எதிராக வாக்கு திருட்டு புகார் கூறிவரும் காங்கிரஸ், ஒருபடி மேலே சென்று PM மோடியை காணவில்லை என்ற பரப்புரையை தொடங்கியுள்ளது. காங்.,யின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், மோடியின் போட்டோவுடன், ‘காணவில்லை.. பெயர்: நரேந்திர மோடி, இவர் வாக்காளர் பட்டியலில் மோசடி, வாக்குகளை திருடி தேர்தலில் வெற்றி பெறுவதில் வல்லவர்’ என கடுமையாக விளாசியுள்ளது. காங்கிரஸின் போஸ்ட் தற்போது இணையத்தில் டிரெண்டாகிறது.
Similar News
News August 29, 2025
ஹீரோ லோகேஷ் படத்தில் 2 ஹீரோயின்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன், லோகேஷுக்கு ஜோடியாகவும், இன்னொரு நாயகியாக சுதா என்பவரும் நடிப்பதாக கூறப்படுகிறது. ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்காக லோகேஷ் தாய்லாந்தில் தற்காப்பு கலைகளை கற்றார்.
News August 29, 2025
ராசி பலன்கள் (29.08.2025)

➤ மேஷம் – நன்மை ➤ ரிஷபம் – ஆதாயம் ➤ மிதுனம் – போட்டி ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – லாபம் ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – வெற்றி ➤ தனுசு – ஆதரவு ➤ மகரம் – பரிசு ➤ கும்பம் – நிம்மதி ➤ மீனம் – உயர்வு.
News August 29, 2025
சிறிய கட்சிகளுக்கு ₹4,300 கோடி நன்கொடை

குஜராத்தில் 10 சிறிய கட்சிகள், கடந்த 5 ஆண்டுகளில் ₹4,300 கோடி நன்கொடை பெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடந்த 3 தேர்தல்களில் 10 கட்சிகளும் சேர்த்து ₹39.02 லட்சம் செலவு செய்ததாக கணக்கு காட்டிய நிலையில், தணிக்கை அறிக்கையில் ₹3,500 கோடி செலவிட்டதாக கட்சிகள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை ECI விசாரிக்குமா (அ) சத்திய பிரமாணம் கேட்பதோடு முடித்துக் கொள்ளுமா என ராகுல் வினவியுள்ளார்.