News August 28, 2025

தமிழக அணிக்கு பின்னடைவு… விடைபெற்ற CSK வீரர்

image

தமிழகத்தின் ஹர்திக் பாண்ட்யா என்றழைக்கப்பட்ட விஜய் சங்கர் TNCA-வில் இருந்து விலகியுள்ளார். வேறு மாநிலத்திற்காக விளையாட தமிழக கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடை இல்லா சான்றிதழ் பெற்றிருக்கிறார். ரஞ்சி, விஜய் ஹசாரே தொடர்களில் தமிழகத்தை வழிநடத்திய அவருக்கு தற்போது பிளேயிங் 11-ல் இடம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக கேரளா அல்லது திரிபுரா அணிகளில் விளையாட வாய்ப்பு தேடி வருகிறார்.

Similar News

News August 29, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 442
▶குறள்: உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
▶ பொருள்: வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

News August 29, 2025

ஆயுள்காலம் அதிகரிக்க இதுதான் ஒரே வழி…

image

இந்தியாவின் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலத்தை 3.5 ஆண்டுகள் அதகரிக்கலாமாம். உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு குறைந்ததால், டெல்லி மக்களின் ஆயுள்காலம் 8.2 ஆண்டுகளாக அதிகரிக்கும் எனவும் சிகாகோ பல்கலையின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மாசு குறைந்து ஆயுட்காலம் அதிகரிக்க வாய்ப்பிருக்கா மக்களே?

News August 29, 2025

பாரதத்தை புரிந்து கொள்ள சமஸ்கிருதம் அவசியம்: RSS

image

இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையான குருகுலக் கல்வி, உலகின் நம்பர் 1 கல்வி மாடலான ஃபின்லாந்தின் கல்வி மாடலை போன்றது என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆகையால், குருகுலக் கல்வியை மாற்றாமல், அதை இன்றைய நவீன கல்வியுடன் இணைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நமது பாரதத்தை புரிந்து கொள்ள சமஸ்கிருதம் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!