News August 28, 2025

நாகைக்குள் பேருந்துகள் நுழைய தடை

image

வேளாங்கண்ணியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தனியார் பேருந்துகள் நாகை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், மதுரை, கரூர், திண்டுக்கல், மணப்பாறை, கோவை, பொள்ளாச்சி, பாலக்காடு, தர்மபுரி மற்றும் கேரளாவில் இருந்து வரும் பேருந்துகள் கீழ்வேளுரில் இருந்து வலதுபுறம் திரும்பி தேவூர், திருக்குவளை, திருப்பூண்டி வழியாக வேளாங்கண்ணிக்கு வர மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Similar News

News August 29, 2025

நாகை: காலை உணவு திட்டத்தில் 23,119 மாணவர்கள் பயன்

image

நாகை மாவட்டத்தில் 351 அரசு பள்ளிகள் உள்ளன. இதேபோல 124 அரசு உதவிபெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அமைந்துள்ள. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 475 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் 23,119 மாணவர்கள் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 29, 2025

நாகை: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள ‘1543’ இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc, B.E., B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் செப்.17-க்குள் விண்ணபிக்க வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 29, 2025

நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய மாதா பிறந்த நாள் செப்.9ஆம் தேதி கொண்டாடப்படு உள்ளது. அன்றைய தினம் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் செப்.20ம் தேதி வேலை நாளாக அறிவித்தும் ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!

error: Content is protected !!