News August 28, 2025
சேலம் விமான பயணிகளின் கவனத்திற்கு!

சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஆக.28) பெங்களூரு, கொச்சினுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இயக்கப்படவிருந்த அனைத்து ஏர் அலையன்ஸ் விமான சேவைகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 29, 2025
விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊர் செல்வோர் அதிர்ச்சி!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக கோவை,சேலம், உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் பயணிகள் ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது.
News August 28, 2025
மாவட்ட அளவில் வங்கிகள் ஆய்வுக் கூட்டம்

சேலம் மாவட்ட அளவில் வங்கிகளுக்கான முதல் காலாண்டு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார மேம்பாடு தொடர்பான அனைத்து வரவு செலவுகளுக்கும் வங்கி முழுமை நடைபெற்று வருவதால் காலாண்டில் நடைபெற்ற வரவு செலவு மேற்கொள்ள வேண்டிய விரிவாக்கம் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
News August 28, 2025
சேலம் டிகிரி முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

சேலத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு மற்றும் தயாரிப்பு மற்றும் எம்படெட் சோதனை பயிற்சி வழங்கப்பட உள்ளது இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்த 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்ட சமூக இளைஞர்கள் விருப்பமுள்ளவர்கள் இணையதளம் www.tahdco.com விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவிகேட்டுக் கொண்டுள்ளார்.