News April 9, 2024
‘மகாராஜா’ படம் எப்போது வெளியாகும்?

சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மகாராஜா’ திரைப்படம், வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. விஜய் சேதுபதியின் 50ஆவது படமான இதற்கு, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், தற்போது பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 3, 2026
திமுகவா.. அதிமுகவா? கிருஷ்ணசாமி ஆலோசனை

2026 தேர்தல் தொடர்பாக மார்ச் 5-ம் தேதியன்று புதிய தமிழகம் கட்சி ஆலோசனை நடத்தவுள்ளது. 10+1 சீட்களை அதிமுக கூட்டணியில் கேட்டுள்ளதால் இழுபறி நீடிக்கிறதாம். அதேநேரம், திமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 + 1 என திமுக ஆஃபர் அளிப்பதாகவும், இதுகுறித்தே மார்ச் 5-ல் ஆலோசனை நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்கள் கருத்து என்ன?
News March 3, 2026
வியர்க்குருவுக்கு ‘பவுடர்’ யூஸ் பண்றது சரியா?

சம்மர் சீசனில், வாட்டி வதைக்கும் வியர்க்குருவை சமாளிக்க பலரும் வியர்க்குரு பவுடர்களை பயன்படுத்துகின்றனர். அந்த பவுடர்களில் menthol, camphor, zinc oxide போன்றவை இருக்க வேண்டும். இவற்றால், வியர்வை கொஞ்சம் உறிஞ்சப்படும். ஆனால், இந்த பவுடர் நிரந்தர நிவாரணம் அளிக்காது. ஆனால், இந்த பவுடரை அதிகமாக பயன்படுத்தினால், வியர்வை நாளங்களை அடைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News March 3, 2026
சங்கீதாவுக்கு ₹250 கோடி வழங்க முடிவு செய்தாரா விஜய்?

மனைவி சங்கீதா விவாகரத்து கோரியது விஜய்யின் அரசியல் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சுமுகமாக முடிவெடுக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். விவாகரத்து மனுவை திரும்பப் பெறக்கோரி விஜய் தரப்பில் இருந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக ஊடகமொன்றில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மனைவி சங்கீதா, மகன், மகளுக்கு ₹250 கோடி வழங்க விஜய் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.


