News August 28, 2025

கன்னியாகுமரி மருத்துவமனைக்கு தேசீய அங்கீகார சான்றிதழ்.

image

கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 500 படுக்கை வசதி கொண்ட இங்கு 500 மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்காக வசதிகள் பல இங்கு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி உட்பட தமிழகத்தில் 5 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு தேசிய அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Similar News

News November 16, 2025

குமரி: ரூ.8 லட்சம் மோசடி.. தாய், மகள் கைது

image

சேலம் இளம்பிள்ளை பகுதி நாகராஜன் ஆன்லைனில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரிடம் குளச்சல் மெஜிலா (41) இவரது மகள் ஷானிகா (20) ஆகியோர் ஆன்லைனில் ஜவுளி வாங்கி ஜிபேயில் பணம் அனுப்பி உள்ளனர். ரூ.1 அனுப்பி ஸ்கிரீன் ஷாட்டில் திருத்தி முழுதொகை அனுப்பியதாக நாகராஜனை நம்ப வைத்துள்ளனர். ரூ.8 லட்சம் மோசடி செய்திருப்பதை தெரிந்த நாகராஜன் சேலம் போலீசில் அளித்த புகார்படி நேற்று தாய், மகள் நேற்று கைதாகினர்.

News November 16, 2025

குமரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

குமரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை. எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News November 16, 2025

குமரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

error: Content is protected !!