News August 28, 2025

தேனி: தாசில்தார் லஞ்சம் கேட்டால் இங்க புகாரளியுங்க..!

image

தேனி மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று (அ) பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு குறிப்பிட்ட பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், 04546-255477 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடி நடவடிக்கை பாயும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News August 29, 2025

தேனி மக்களே இதை பயன்படுத்திக்கோங்க

image

கண்டமனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை(ஆக.,30) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடக்கிறது.முகாமில் பொது மருத்துவம், எலும்பியல், பொது அறுவை சிகிச்சை, பெண்கள்நலன், குழந்தைகள் நலன், பல் மருத்துவம், கண் மருத்துவம், காதுமூக்கு தொண்டை, மன நலம், நுரையீரல் பிரிவு, சக்கரை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.
இதில் அனைவரும் பங்கேற்று பயனடையலாம்.மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க.

News August 29, 2025

நிழற்குடை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

image

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுவரும் புதிய பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் இன்று (28.08.2025) நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News August 28, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 28.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!