News August 28, 2025

BREAKING: தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

image

தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு வெளியாகியுள்ளது. 2015-ல் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அஹமது உயிரிழந்த விவகாரத்தில், 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதுதொடர்பாக 6 கட்டங்களாக பதியப்பட்ட வழக்கில் 126 பேரை விடுதலை செய்து திருப்பத்தூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News August 29, 2025

TR பாலு சொத்து மதிப்பு ₹10,000 கோடியா?

image

திமுக MP TR பாலுவுக்கு ₹10,000 கோடி சொத்துக்கள் இருப்பதாக அண்ணாமலை கூறிய விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த வழக்கில் இன்று, கோர்ட்டில் ஆஜரான TR பாலு, <<17545001>>செய்தியாளரை ஒருமையில்<<>> பேசிய விவகாரம் மேலும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனிடையே, TR பாலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு என பலரும் தேடத் தொடங்கியுள்ளனர். 2024 LS தேர்தல் <>பிரமாண பத்திரத்தில்<<>> தனக்கு ₹45.7 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News August 29, 2025

ALERT: 19 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

நீலகிரி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செங்கை, காஞ்சி, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?

News August 29, 2025

ஹீரோ லோகேஷ் படத்தில் 2 ஹீரோயின்கள்

image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன், லோகேஷுக்கு ஜோடியாகவும், இன்னொரு நாயகியாக சுதா என்பவரும் நடிப்பதாக கூறப்படுகிறது. ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்காக லோகேஷ் தாய்லாந்தில் தற்காப்பு கலைகளை கற்றார்.

error: Content is protected !!