News August 28, 2025
பட்டாசு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. உடன் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கூடுதல் இயக்குநர் (திருச்சி) கலந்துகொண்டனர்.
Similar News
News August 28, 2025
விழுப்புரத்தில் ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள்.

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலம், வருகிற 31-ந்தேதி நடைபெறும்.
News August 28, 2025
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மேம்பாட்டுப் பணிகள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை மேம்படுத்தும் பணிகள் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில் நடைபெற்று வருகின்றன. வளாகத்தில் உள்ள பூங்கா சீரமைக்கப்பட்டதுடன், அரசுப் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களுக்கு தினமும் தேநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் முகாம் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் 15 வண்ணங்களில் 1,200 காகிதப் பூச்செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது
News August 28, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காங்கேயனூர்
▶️ சோலை வாழியம்மன் கோயில், கூடுவாம்பூண்டி
▶️ ஜெயபாரதி மண்டபம், கொத்தனூர்
▶️ வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், கோலியனூர்
▶️ வேதா உயர்நிலைப் பள்ளி, கோட்டக்குப்பம்
▶️ குஷால் சந்த் பள்ளி வளாகம், திண்டிவனம்
பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.