News August 28, 2025

திருப்பூருக்கு தினசரி 700 கோடி வரை இழப்பு

image

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்தே நடக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் விதித்த 50 சதவீத அபராத வரியானது திருப்பூர் பின்னலாடை தொழிலை ஸ்தம்பிக்க செய்துள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. தினசரி ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை உடனடி இழப்பு ஏற்படும் என ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகி முத்துரத்தினம் தெரிவித்தார்.

Similar News

News August 29, 2025

திருப்பூரில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீசார் சோதனை நடத்திய போது, தமிழக அரசு தடை செய்த குட்கா பொருட்களை வைத்திருந்த பிரோஜ் மற்றும் அஜிருதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 5.3 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News August 28, 2025

திருப்பூர்: டிகிரி முடித்திருந்தால் அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். நாளை மறுநாள் 30ஆம் தேதி கடைசி ஆகும். SHARE பண்ணுங்க!

News August 28, 2025

BREAKING: திருப்பூரில் வெடிகுண்டு மிரட்டல்!

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் தெரியவில்லையென உறுதி செய்யப்பட்டதையடுத்து, இது ஒரு தவறான தகவல் என உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!