News August 28, 2025
மாணவர்கள் இனி ஃபோன் பயன்படுத்த தடை

தென்கொரியாவில் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றில் சிக்குவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 2026 முதல் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும், பள்ளியில் இருந்து வந்தவுடன் மாணவர்கள் செல்போனே கதி என இருக்கின்றனர். இதனை அரசு எப்படி கையாளலாம்? கமண்ட்ல சொல்லுங்க.
Similar News
News August 28, 2025
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டது 3 பேர் மட்டுமே: NIA

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் 3 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகள் மட்டுமே இருப்பதாக NIA உறுதி செய்துள்ளது. ஆபரேஷன் மகாதேவின் போது 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், NIA-ன் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. 4-க்கும் அதிகமான தீவிரவாதிகள் இருந்ததாக தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர் போலீசாரின் கூற்றை NIA மறுத்துள்ளது.
News August 28, 2025
BREAKING: தொடர் விடுமுறை.. மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையை ஒட்டி சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது. கச்சிகுடா – மதுரை (அக்.20 முதல் நவ.26 வரை திங்கள் மட்டும்), மதுரை – கச்சிகுடா (செப். 22 – நவ. 26 வரை புதன் மட்டும்), ஹைதராபாத் – கன்னியாகுமரி (அக்.15 – நவ. 26 வரை புதன் மட்டும்), கன்னியாகுமரி – ஹைதராபாத் (அக்.17 முதல் நவ. 28 வரை வெள்ளி மட்டும்) ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News August 28, 2025
அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி: கெஜ்ரிவால் கோரிக்கை

டிரம்ப் ஒரு கோழை என்று அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். தன்னை எதிர்க்கும் நாடுகளுக்கு அடிபணியும் டிரம்ப் முன்பு, நமது பிரதமர் அமைதியாக இருப்பது ஏன் என தெரியவில்லை எனவும், அமெரிக்கா 50% வரிவிதித்தால், இந்தியா 100% வரிவிதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், 140 கோடி மக்கள் தொகையும், வலிமையான சந்தையும் கொண்ட நாம் என்ன பலவீனமான நாடா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.