News August 28, 2025
ஓணம் பண்டிகைக்காக சென்னை-கண்ணூா் சிறப்பு ரயில்!

சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை (ஆக.28) இரவு புறப்படும் சென்னை – கண்ணூா் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் மறுநாள் பிற்பகல் கண்ணூா் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் திருவள்ளூர் காட்பாடி திருப்பூர் போத்தனூர் பாலக்காடு வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 29, 2025
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. போக்குவரத்து மாற்றம்

மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில்,”விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று (ஆக.29) மாலை 5 மணி முதல் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் டீச்சர்ஸ் காலனி, அரசு கல்லூரி, அன்னூர் சாலை சென்று செல்லலாம். இதேபோல் ஊட்டியில் இருந்து வரும் வாகனங்கள் ராமசாமி நகர், பாலப்பட்டி, வேடர் காலனி, சிறுமுகை நால்ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
News August 29, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (28.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 28, 2025
கோவை: டிகிரி முடித்திருந்தால் அரசு வேலை!

கோவை மக்களே, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <