News August 28, 2025
USA வரிவிதிப்பால் ₹3,000 கோடி வர்த்தகம் பாதிப்பு: CM ஸ்டாலின்

USA-வின் 50% வரிவிதிப்பால் தமிழகத்தின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜவுளித் துறையின் மையமான திருப்பூரில் ₹3,000 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News August 28, 2025
SPORTS ROUNDUP : அனாஹத் சிங் அசத்தல்

*உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் துருவ் – தனிஷா இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
*17 வயதான அனாஹத் சிங் தொடர்ந்து 3வது முறையாக தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கும் தேர்வாகியுள்ளார். *சின்க்ஃப்லீட் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
News August 28, 2025
Tech: இந்த App உங்க ஃபோன்ல இருக்கா? முடிஞ்சுது போங்க!

ஓடிடி-யில் படம் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டதால் இதற்காகவே நெட்பிளிக்ஸ், ப்ரைம் அக்கவுண்ட்டுகளுக்கு பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதற்கு பணம் செலுத்த முடியாதவர்கள், அதில் வரும் படங்களை இலவசமாக பார்க்கவேண்டும் என்பதற்காக Playstore-ல் இல்லாத ‘Net Mirror’ போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதுபோன்ற செயலிகள் உங்கள் ஃபோனை ஹாக் செய்வதோடு அதிலுள்ள தகவல்களை திருடலாம். உஷார்!
News August 28, 2025
BCCI-க்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய சீக்கா!

சீனியர் வீரர்களை BCCI தவறாக கையாள்வதாக சீக்கா சாடியுள்ளார். சீனியர் வீரர்களான கோலியும், ரோஹித்தும் ஓய்வு அறிவித்த போது அவர்கள் முறையாக வழியனுப்பபட்டார்களா எனவும், BCCI அவர்களிடம் இதுகுறித்து பேசியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புஜாராவிற்கும் இதேதான் நடந்ததாகவும், வீரர்கள் – BCCI இடையே தகவல் தொடர்பு இடைவெளி இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.