News April 9, 2024
தமிழ்நாட்டில் மின்தேவை தொடர்ந்து புதிய உச்சம்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மின்சாரத் தேவையும் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் அதிகளவில் வெப்பம் இருப்பதால் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 20,125 மெகாவாட் மின்தேவை பதிவாகியுள்ளது. ஏப்.5ல் 19,580 மெகாவாட் ஆக இருந்த மின் நுகர்வு 3 நாள் இடைவெளியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
Similar News
News March 22, 2026
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் CPM

திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு CPM தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் நடந்த CPM மாநில குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொகுதி எண்ணிக்கை விவகாரத்தில் விட்டுக் கொடுக்கப்போவதில்லை என்பதிலும் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், CPM-ஐ இதுவரை திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
News March 22, 2026
சரசரவென சரியும் வெள்ளி விலை!

கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹40,000 குறைந்துள்ளது. கடந்த 13-ம் தேதி சில்லறை விற்பனையில் கிராம் ₹290-க்கு விற்பனையான வெள்ளி, தற்போது ₹250 ஆக உள்ளது. அதேபோல், மொத்த விற்பனையில் 1 கிலோ ₹2,50,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 15% விலை சரிந்ததே, இந்த கடும் வீழ்ச்சிக்கு காரணமாகும். வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாம்.
News March 22, 2026
ஆட்சியில் பங்கு கேட்கிறதா பாஜக? தமிழிசை

அதிமுக கூட்டணி ஆட்சி அமைத்தால், பாஜக அதிகாரத்தில் பங்கு கேட்கும் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பேசிய தமிழிசை, கூட்டணி ஆட்சி பற்றி தற்போது எந்த கருத்தும் கூற முடியாது என தெரிவித்துள்ளார். அதேநேரம், தேர்தல் முடிவைப் பொறுத்து அது அமையும் என்றும் அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இது அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


