News August 28, 2025

BREAKING: விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு

image

BJP கூட்டணியில் இருக்கும் டிடிவி, விஜய்க்கு ஆதரவாக வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் சர்வே எடுத்தவர்கள் சொல்வதை பார்த்தால், 2006 தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, 2026-ல் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார். மேலும், விஜய்யால் பல கட்சிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்; இதை கூறுவதால் தவெகவுடன் கூட்டணிக்கு செல்வேன் என்று அர்த்தமில்லை எனத் தெரிவித்தார்.

Similar News

News March 10, 2026

ஈரான் போரால் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்

image

போர் காரணமாக அடுத்த 72 மணி நேரத்திற்குள் நாட்டின் முக்கிய நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. வீட்டு LPG சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளித்து வணிக சிலிண்டர்களின் விநியோகம் தடைபட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என்று பெங்களூரு ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம் LPG விநியோகம் சீராவதை உறுதி செய்யுமாறு PM-க்கு சென்னை ஹோட்டல் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

News March 10, 2026

நண்பன் ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு: ரஷ்யா

image

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரில் ஈரானுக்கு வெளிப்படையான ஆதரவை ரஷ்யா தெரிவித்துள்ளது. ஈரானின் புதிய உயர் தலைவர் <<19341792>>மொஜ்தபா கமேனியின் நியமனத்திற்கு டிரம்ப் எதிர்ப்பு<<>> தெரிவித்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நட்பு நாடான ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த விரும்புவதாகவும், என்ன ஆனாலும் தங்களது ஆதரவு தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

News March 10, 2026

இந்த கணக்குகளில் 0 பேலன்ஸ் இருந்தாலும் அபராதம் இல்லை!

image

PMJDY உள்பட 72 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த கணக்குகளைப் பராமரிக்காததற்கு அபராதம் விதிக்கப்படாது, மேலும் வைப்புத்தொகை, பணம் எடுப்பது மற்றும் ஏடிஎம் சேவைகளுக்கும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது; வங்கிச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!